×

நாகை மாவட்டத்தில் மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்-கலெக்டர் ஆய்வு

நாகை : நாகை நடந்த மாபெரும் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நாகூர் கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொந்தகை மதாரியா அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, திட்டசேரி அரசு மேல்நிலைபள்ளி, சீயாத்தமங்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி, பெரவாச்சேரி ஆண்டவர் நர்சிங் பயிற்சி பள்ளி, சிக்கல் ஊராட்சி மன்ற அலுவலகம், தேமங்கலம் ஆரம்ப சுகதார நிலையம், நாகை சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளி, தேசிய மேல்நிலைப் பள்ளி, திருப்பூண்டி அரசு மேல்நிலைபள்ளி, வேளாங்கண்ணி ஆர்ச், திருப்பயணிகள் தங்கும் மண்டபம், வெளிப்பாளையம் தேவர் சமூதாயகூடம், தாமரைக்குளம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 12ம்தேதி நடந்த முதல் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 325 இடங்களில் நடத்தப்பட்டு 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதைவிட கூடுதலாக 32 ஆயிரத்து 431 தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 129 இடங்களில் நடத்தப்பட்டு 18 ஆயிரம் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக 262 தடுப்பூசி முகாம்கள் அமைக்கபட்டு 28 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் தடுப்பூசி செலுத்தியதில் மாநிலத்திலே 9 வது இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் 5.8 லட்சம் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி 3.52 லட்சம் அதாவது 60 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 94 ஆயிரத்து 500 அதாவது 16 சதவீத மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. சிறப்பு முகாம் மூலம் மீனவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள், நீரழிவு நோய், ரத்தகொதிப்பு நோய் உள்ள அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அசைவம் சாப்பிடலாம்.

தடுப்பூசி செலுத்தி கொண்டால் நோய் வராது என்று கூறமுடியாது. ஆனால் உயிரிழப்பு ஏற்படாது என்றார். துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) விஜயகுமார், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன், நகர்நலஅலுவலர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nagy district , Nagai: Nagore Giant Third Phase Corona Vaccination Camp Nagore Crescent Metric High School, Kontagai Madaria Government
× RELATED நாகை மாவட்டத்தில் மீன்களில்...